இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது இந்திய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரை சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதிலும் வரும் 24ஆம் தேதி அன்று நடக்க உள்ள டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் இவ்வேளையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சௌரவ் கங்குலி ஒரு நற் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது :
அகமதாபாத் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. மேலும் நான் ஜெய் ஷா உடன் ஆலோசித்த போது ஆறு ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அகமதாபாத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப் படுவதால் அங்கு அந்த போட்டியை காண மக்கள் ஆர்வமாக உள்ளார்கள் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் அகமதாபாத் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானமானது உலகிலேயே மிகப் பெரிய மைதானம் என்பதால் இந்த போட்டியை காண ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். அதுமட்டுமின்றி இங்கே பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது ஒரு வரலாற்று நிகழ்வாக மாறும்.
அதுமட்டுமின்றி இந்த டெஸ்ட் தொடருக்கு மட்டுமல்ல மீதமுள்ள ஐந்து டி20 போட்டிகளும் அங்கேதான் நடத்தப்பட உள்ளன. அந்த போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஒட்டு மொத்தமாக விற்பனை ஆகியுள்ளது என்று கங்குலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.