சச்சின் எப்போதும் முதல் பந்தை சந்திக்கவே மாட்டார். நான் தான் சந்திப்பேன் – கங்குலி சொன்ன சீக்ரெட்

Ganguly
- Advertisement -

இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த துவக்க ஜோடி என்றால் அது சச்சின் கங்குலி ஜோடி தான். இவர்கள் இருவரும் களத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்தால் ரசிகர்களுக்கு அவ்வளவு சுவாரசியமான குதூகல அனுபவம் ஏற்படும். 1996 ஆம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக சச்சின் கங்குலி ஜோடி களமிறங்கி உள்ளது.

Ganguly-1

- Advertisement -

சுமார் 136 இன்னிங்ஸ்களில் 6609 ரன்களை இந்த ஜோடி குவித்துள்ளது. இந்த ஜோடியின் சராசரி 49.32 ஆகும். இவர்களின் சாதனையை தற்போது வரை எந்த துவக்க வீரர்களும் எட்ட முடியவில்லை. அந்த அளவிற்கு தங்களது சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த சச்சின் கங்குலி துவக்க வீரர்களாக இருபெரும் ஜாம்பவான்களாக கிரிக்கெட் வட்டாரத்தில் பார்க்கப்படுகின்றனர்.

ஆனால் சச்சின் கங்குலி ஒன்றாக களம் இறங்கிய காலகட்டத்தில் எப்போதும் முதல் பந்தினை கங்குலி தான் எதிர் கொள்வார். சச்சின் எப்பொழுதும் போட்டியின் முதல் பந்தை ஆடவே மாட்டார். இந்நிலையில் இதுகுறித்து பி.சி.சி.ஐ சார்பில் நடைப்பெற்ற ஒரு நேரலையில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கங்குலி :

ஆமாம் எப்போதும் சச்சின் முதல் பந்தை எதிர்கொள்ள மாட்டார். என்னையே முதல் பந்தை எதிர்கொள்ள செய்யும்படி கேட்டுக் கொள்வார். சில நேரம் நான் அவரிடமிருந்து விலகி இந்த முறை நீங்கள் முதல் பந்தை சந்தியுங்கள் என்று கூறுவேன். ஆனால் அதற்கும் அவர் நீங்கள்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு சென்று விடுவார்.

- Advertisement -

மேலும் அதற்கு சச்சின் இரு காரணங்களை வைத்திருந்தார். ஒன்று தனது பார்ம் நன்றாக இருந்தால் முதல் பந்தை சந்திக்கக்கூடாது என்று அவருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இரண்டாவது காரணம் பார்ம் சரிவர இல்லை என்றாலும் முதல் பந்தை சந்தித்தால் அழுத்தம் ஏற்படும் என்று முதல் பந்தை சந்திக்க மாட்டார் எனவே இந்த இரண்டு காரணங்களைக் கூறிக் கூறியே என்னை முதல் பந்தை சந்திக்க அனுப்புவார்.

sachin

ஆனால் ஒரு சில நேரங்களில் நான் சச்சினை முதல் பந்தை எதிர்கொள்ள கட்டாயமாக அனுப்பியுள்ளேன். பெவிலியனில் இருந்து நேராக மைதானத்திற்கு நடக்கும்போது நான் விரைவாக சென்று பிச்சின் மறுமுனையில் நின்று விடுவேன். தொலைக்காட்சி நேரலை போட்டியை காண்பித்துக் கொண்டிருக்கும் சச்சின் எதுவும் கூறாமல் முதல் பந்தை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். ஆனால் அது போன்று இரண்டு முறை மட்டுமே நடந்திருக்கிறது என்று கங்குலி சுவாரசிய தகவல்களை பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement