குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்க்கும் கங்குலியின் மகள் பதிவிற்கு குவியும் வாழ்த்து – பயப்பட்டு பதிவை நீக்கிய கங்குலி

Sana

இந்திய குடியுரிமை சட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜக அரசு இந்திய குடியுரிமை சட்ட மசோதாவை மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த சட்ட மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தலைவர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

மேலும் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் ஜாம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் என பலரும் போராட்டத்தில் குதிக்க இந்த போராட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்து மிக தீவிரமாக உருவெடுத்து தற்போது இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு பெற்றுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் இந்த போராட்டத்தில் இறங்கி வருகின்றனர். மேலும் பல இந்தியா முழுவதும் பல இளைஞர்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்க்கும் விதமாக கங்குலியின் மகள் சனா ஒரு பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். பல்வேறு பிரபலங்களும் மௌனமாக இருக்கும் நிலையில் கங்குலியின் மகள் தைரியமாக ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில் 2003 ஆம் ஆண்டு வெளியான “தி எண்ட் ஆஃப் இந்தியா” என்ற புத்தகத்தின் சில வரிகளை அவர் பதிவிட்டுள்ளார்.

கங்குலியின் மகள் பதிவிட்ட இந்த பதிவு இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் சனா குறித்து பதிவிட்டதாவது : இந்த பதிவு உண்மை இல்லை. அவள் ஒரு இளம் பெண் அரசியல் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்றும் விளக்கமளித்துள்ளார். அதன்பின் தற்போது சனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் சனாவின் இந்த பதிவிற்கு இந்தியா முழுவதும் ஆதரவும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

- Advertisement -