பிங்க்பால் டெஸ்ட் : இந்த போட்டியில் இவங்க ஜெயிக்க தான் அதிக வாய்ப்பு இருக்கு – கங்குலி கணிப்பு

Ganguly-3

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நேற்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

cup

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்து சிறப்பாக போட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருக்கும். ஆனால் அந்த அத்தனை கணக்குகளுக்கும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முட்டுக்கட்டை போட்டு உள்ளனர். அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனால் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை குவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேலும் 46 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

kohli

இந்நிலையில், நெஞ்சுவலி வலி காரணமாக சமீபத்தில் பாதிக்கப்பட்டு மீண்டும் தனது இயல்பான வேலைகளுக்கு திரும்பியுள்ள பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலி ஆன்லைன் மூலமாக இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து பேசியிருக்கிறார். இதுகுறித்து கங்குலி பேசுகையில் : “இந்திய அணியின் ஆட்டம் சிறப்பாக இருக்கிறது. இந்த பகல் இரவு போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது.

- Advertisement -

IND

ஏனெனில் இந்த போட்டியின் துவக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். நான் எப்போதும் வெற்றி தோல்வி குறித்து பேச மாட்டேன். ஆனால் இந்த போட்டி இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று அடித்துக் கூறுவேன்” என்று கங்குலி கூறியிருக்கிறார். தற்போதைய நிலவரப்படி இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 33 ரன்கள் அடித்துள்ளதால் இந்திய அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.