இவர் இந்திய அணியில் இருக்கும் வரை எதிரணிக்கு வெற்றி வாய்ப்பு கம்மிதான் – கங்குலி வெளிப்படை

Ganguly-3
- Advertisement -

நான்கு போட்டிகளைக் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி பிப்ரவரி 5ஆம் தேதி அன்று முதல் போட்டியுடன் ஆடத்தொடங்கியது. மிகப்பெரிய வித்தியாசத்தில் இந்திய அணி அப்போட்டியில் தோல்வியடைந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில்இந்தியாவில் போகுமா என்கிற சந்தேகத்தை எழுப்பியது. ஏனெனில் இந்த தொடரை வென்றால் மட்டுமே இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெறும். அப்படியிருக்க எப்படி இந்திய அணி இந்த தொடரை வெல்ல போகிறது என்ற அனைவரும் பயந்த வேளையில் அடுத்தடுத்து மூன்று போட்டிகளை வென்று தொடரை அபாரமான வகையில் கைப்பற்றியது.

indvseng

- Advertisement -

கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா முடிந்தவரை தனது பங்களிப்பை சிறப்பாக அளித்தார். அதுபோல அக்ஷர் பட்டேலும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோடி போட்டுக் கொண்டு தங்களது சுழற்பந்து வீச்சாளர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணற வைத்தனர். அதுபோல வாஷிங்டன் சுந்தரும் இறுதிப்போட்டியில் 8வது இடத்தில் களம் இறங்கி தனது பேட்டிங் திறமையை காட்டினார்.

இவர்களெல்லாம் ஒருபக்கம் பெர்ஃபார்ம் செய்தாலும் தேவைப்படும் இடங்களில் மிக கூலாக தனது அதிரடி இன்னிங்சை ரிஷப் பண்ட் காட்டினார் என்று கங்குலி புகழ்ந்து கூறினார். மேலும் பேசிய கங்குலி , ரிஷப் பண்ட் உடன் நான் நிறைய விஷயம் பேசியிருக்கிறேன். அவரை நான் நெருங்கி கவனித்து இருக்கிறேன். அதிரடியாக ஆடி மேட்சை எப்படி ஃபினிஷ் செய்ய வேண்டும் என்கிற கலை அவருக்கு நன்றாக தெரியும்.

Pant

அப்படி தான் இந்திய அணி 4-வது போட்டியில் ஒரு கட்டத்தில் 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது ஒருமுனையில் ஆண்டர்சன் , ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் பந்து வீசியும் அதை பெரிதாக கணக்கில் கொள்ளாமல் தனது அதிரடி ஆட்டத்தை ஆடி சதமடித்தார்.

pant 1

இதேபோல சிட்னி மட்டும் காபா டெஸ்ட் தொடரிலும் அதிரடியாக ஆடி அவர் வெளிப்படுத்திய ஆட்டம் அனைவரது கவனத்தையும் பெற்றது. அதை தான் அவர் எங்கும் செய்துள்ளார் என்றும் மேலும் ரிஷப் பண்ட் உள்ளே இருக்கும் வரை எதிர் அணிக்கு வெற்றி வாய்ப்பு மிக கம்மி தான் என்றும் கங்குலி கூறினார்.

Advertisement