இந்திய அணியின் வெற்றிக்கு பாஸ்ட் பவுலர்ஸ் தான் காரணம். ஆனா அவங்க சிறப்பாக பந்துவீச இவர்களே காரணம் – கங்குலி புகழாரம்

- Advertisement -

இந்திய அணி தற்போது மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மேலும் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று அந்நாட்டு மண்ணிலே வெற்றிகளை குவிக்கும் இந்திய அணி தொடர்ச்சியாக பல வெற்றிகளை அனைத்து நாடுகளிலும் குவித்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிக பலமாக இருந்தது ஆனால் வேகப்பந்து வீச்சு கேள்விக்குறியாகவே அமைந்திருந்தது.

IND-bowlers

- Advertisement -

ஆனால் இப்போது உள்ள இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு யூனிட் மிகச்சிறப்பாக மாறியுள்ளது. கங்குலியின் தலைமையில் மெல்ல மெல்ல தலைதூக்க ஆரம்பித்த இந்திய அணி தற்போது தோனியை கடந்து கோலியின் வாசம் மிகுந்த பலமாக வளர்ந்து நிற்கிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை மட்டுமின்றி வேகப்பந்து வீச்சு படையும் மிகச்சிறப்பாக ஆதிக்கம் செலுத்திவருகிறது.

தற்போது உள்ள இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், நவதீப் சைனி, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் என வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசைகட்டி இருக்கின்றனர். இவர்கள் அனைவரின் சிறப்பான செயல்பாட்டினால் இந்திய அணி வெற்றிகளை குவித்து வருகிறது.

ind

இந்நிலையில் தற்போது இந்த வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட யார் காரணம் என்பது குறித்து பிசிசிஐ இன் தலைவரும், முன்னாள் கேப்டன் கங்குலி ஏற்கனவே அளித்த பேட்டி தற்போது வைரலாகிவருகிறது. அதில் அவர் குறிப்பிட்டதாவது : இந்திய அணி வீரர்கள் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதற்கும், வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவதற்கும் அவர்களது பயிற்சியாளர்கள் மற்றும் ட்ரெய்னர்களே காரணம்.

- Advertisement -

ஏனெனில் அவர்கள் வீரர்களை அதிகம் காயம் ஏற்படாமல் பாதுகாத்து, அவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்து தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கமளித்து சிறப்பாக செயல்பட வைத்து இருக்கிறார்கள். தற்போதைய இந்திய அணியின் இந்த அசாத்திய வேகப்பந்து வீச்சுக்கு பின்னர் பயிற்சியாளர்கள் மற்றும் ட்ரெய்னர்களின் உழைப்பே பெரும்பங்கு வகிக்கின்றன.

Ganguly 1

பேட்ஸ்மேன்கள் பலவிதத்தில் இந்திய அணிக்கு கைகொடுத்தாலும் பந்துவீச்சாளர்களே இந்திய அணி வெற்றிக்கு முக்கிய உதவி புரிகிறார்கள் என்று அந்த சமீபத்திய பேட்டியில் கங்குலி குறிப்பிட்டிருந்தார். ஊரடங்கு இருப்பதால் தற்போதைய இந்திய அணி எந்த போட்டியிலும் மோதாமல் உள்ளது. அதே போன்று கங்குலி தனது சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தன்னைத்தானே தனிமைப் படுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement