நிச்சயம் இவர் வேறு கிரகத்தை சேர்நத மனிதர் ..! கங்குலி பரபரப்பு பேச்சு ..! – காரணம் இதுதான் ..?

ganguly
Advertisement

கிரிக்கெட்டை விட கால்பந்து போட்டிகளுக்கான ரசிகர்கள் மிக அதிகம். தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால் பந்து போட்டி இறுதிபோட்டியை நெருங்கி விட்டது. இந்த தொடரை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் முன்னாள் கால்பந்து வீரர் மாரடோனாவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கங்குலி புகழ்ந்து தள்ளியுளளார்.

நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி லீக் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்தது. அதே போல அனுபவமிக்க அணிகளான அர்ஜன்டீனா, போர்டுகள் போன்ற அணிகளும் தொடரில் இருந்து வெளியேறியது. மேலும், ஸ்பெயின் மற்றும் ரஸ்யா அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அணைத்து கால் பந்து ரசிகர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் பெற்றுள்ள இந்த தொடரை இந்திய கிரிக்கெட் வீரர்களும் கண்டு கழித்து வந்து தங்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கங்குலி, அர்ஜன்டீனாவை சேர்ந்த முன்னாள் கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவை திறமையை போற்றும் வகையில் தனது கருத்தை கூறியுள்ளார்.


இதுபற்றி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கங்குலி, கால்பந்து வீரர் மாரடோனா அடித்த டாப் 10 கோல் அடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளது என்னவெனில் “அணைத்து உலகமும் உறுதி செய்கிறது. இந்த மேதாவி கண்டிப்பாக வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர் என்று, மிகவும் சிறப்பான வீரர் ” என்று மாரடோனாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார் கங்குலி.

- Advertisement -
Advertisement