பிசிசிஐயின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி வரும் 23ம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அவரிடம் இந்திய அணியின் செயல்பாடு குறித்தும், பி.சி.சி.ஐ செயல்பாடு குறித்த கேள்விக்கு அவர் தற்போது பதில் அளித்துள்ளார். அதில் கங்குலி கூறியதாவது :
முதலில் நிர்வாக ரீதியாக பிசிசிஐ அமைப்பு மற்றும் இந்திய உள்ளூர் கிரிக்கெட் அமைப்பையும் வரைமுறைபடுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு எனக்கு உள்ளது. மேலும் என்னைப் பொறுத்தவரை இந்திய அணி கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. சிறப்பான அணி மற்றும் சிறப்பான வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது.
என்னை பொறுத்தவரை இந்திய அணி வெற்றிகள் குவிப்பதில் பெரிய குறை ஒன்றும் இல்லை. ஆனால் நாம் கடந்த 7 பெரிய தொடர்களை இழந்துள்ளோம். அந்த ஒரு குறை மட்டும் தான் கேப்டன் கோலி போக்க வேண்டி இருக்கும். பெரிய தொடர்களில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை தவிர மற்ற போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அதனையும் கோலி மாற்றிக் காட்டுவார். இனிமேல் முக்கிய பெரிய தொடர்களின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெல்லும் அவர் ஒரு சாம்பியன் வீரர் என்று கூறினார்.
கங்குலி குறிப்பிட்ட அந்த ஏழு முக்கிய தொடர்கள் யாதெனில் கடைசியாக தோனி தலைமையில் சாம்பியன்ஸ்டிராபியை வென்றது. அதன் பிறகு 2015 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை 2019 ஆம் ஆண்டு 50வது உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி என இடைப்பட்ட 7 ஐ.சி.சி தொடரை இந்திய அணி கைப்பற்றவில்லை. கோலி மீது இருக்கும் ஒரே ஒரு விமர்சனம் இது மட்டும்தான் எனவே ஐசிசி கோப்பைகளை இனி குறிவைத்து இந்திய அணி செயல்படவே கங்குலி இதை மறைமுகமாக குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.