இனி இந்த பிரச்சனை அணியில் இருக்கவே கூடாது. ஒன்றுசேரும் கங்குலி டிராவிட் – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள் காயம் ஏற்பட்டால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்களது சிகிச்சை மேற்கொண்டு உடல் தகுதியை நிரூபித்தால் தான் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்ற ஒரு விதிமுறை உள்ளது. ஆனால் இந்திய வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சைகள் சரியில்லை என்றும் அதற்கான நடவடிக்கைகளும் சரியான வகையில் கிடைக்கவில்லை என்றும் புகார்களை எழுப்பி வருகின்றனர்.

Dhawan

மேலும் காயமடைந்த வீரர்கள் சிலர் தங்களுக்கு தனியாக சிகிச்சை செய்து கொள்ள மருத்துவர்களையும், உடற்பயிற்சி நிபுணர்களையும் நாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த நிலை மாறுவதற்கு தேசிய கிரிக்கெட் அணியின் தலைவரான டிராவிட் மற்றும் .பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலி ஆகியோர் இணைந்து ஒரு பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.

அதில் இந்திய வீரர்கள் இனி காயம் அடைந்தால் அவர்களுக்கு முறையான சிகிச்சை மற்றும் உடற்தகுதியை சரி செய்ய தேவையான அனைத்து வசதிகளையும் தேசிய கிரிக்கெட் அகடமியில் பெங்களூருவில் நிறுவ செய்யவும் மேலும் சரியான நேரத்திற்குள் வீரர்கள் காயத்தில் இருந்து விடுபட்டு முழு உடல்தகுதியுடன் அணிக்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்வதற்காகவும் இந்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Bhuvi

இந்நிலையில் இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி இந்திய வீரர்கள் காயம் அடைந்தால் லண்டனில் செயல்படும் எனும் பார்சூன் என்ற சிறப்பு மருத்துவமனை உதவியோடு இந்தியாவிலேயே சிகிச்சை அளிக்கப்படும் என்றும் எந்த ஒரு வீரராக இருந்தாலும் கட்டாயம் தேசிய கிரிக்கெட் அகடமியில் எந்த ஒரு குறையுமின்றி உடற்தகுதி நிரூபித்த பின்னரே அணியில் இணைய வேண்டும் என்பதற்காகவும் அனைத்து வசதிகளும் கொண்டு வரவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -