கொரோனாவிற்கு எதிராக ஸ்கெட்ச் போட்ட கங்குலி. ஐ.பி.எல் தொடர் இந்த தேதியில் நடக்குமாம் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Ganguly
- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஏப்ரல் 15ஆம் தேதி வரை நிலைமை எப்படி இருக்கும் என கண்காணிக்க ஐபிஎல் தொடரானது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலி புதிய திட்டத்தை செய்துள்ளார்.

Ipl cup

- Advertisement -

கிட்டத்தட்ட இதற்காக 5 தேதிகளை குறிப்பிட்டு அந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளார் கங்குலி. கங்குலி பிசிசிஐ தலைவர் ஆனவுடன் நடக்கப்போகும் முதல் ஐபிஎல் தொடர் இதுவாகும். இதன் காரணமாக எப்படியாவது திட்டம் தீட்டி ஐபிஎல் தொடரை நடத்தியே தீரவேண்டும் என முழு மூச்சுடன் உள்ளார் கங்குலி.

மார்ச் 29ஆம் தேதி அன்று துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் தற்போது ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை எப்படியாவது நடத்திய தீரவேண்டும் என ஐபிஎல் அணிகள் மற்றும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி முழு முனைப்பில் உள்ளனர். ஏனெனில் இந்த தொடரை நடத்தாமல் விட்டோமானால், பிசிசிஐக்கு கிட்டத்தட்ட சுமார் 2,000 கோடி இழப்பு ஏற்படும். அணிகளுக்கும் இது பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

ipl

இதனால் சௌரவ் கங்குலி 5 தேதிகளை தனது கையில் வைத்துள்ளார். ஏப்ரல் 15, ஏப்ரல் 21, ஏப்ரல் 25, மே 1 மற்றும் மே 5. இந்த ஐந்து தேதிகும் தனித்தனி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதுவரை கொரோனா வைரசின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது என்பது கண்காணிக்கப்படும்.இதில் முதல் இரண்டு தேதிகளில் ஐபிஎல் தொடங்கிவிட்டால் வழக்கம்போல முழுவதும் நடக்கும் . ஆனால் பல நாட்களில் இரண்டு போட்டிகள் நடைபெறும். 56 போட்டிகளும் மொத்தமாக நடத்தி முடிக்கப்படும்.

- Advertisement -

ஒருவேளை போட்டிகள் துவங்க மே மாதம் ஆகிவிட்டால் தொடரை குறைக்க வேண்டும். அல்லது ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மட்டுமே மோத வேண்டும் அல்லது 8 அணிகள் இரு பிரிவாக பிரிந்து ரவுண்ட் ராபின் முறையில் ஆட வேண்டும். இவைதான் சவுரவ் கங்குலியின் திட்டம்.

Ganguly

ஆனால் கரொனா வைரஸ் பாதிப்பு இன்னும் அதிகமானால், கண்டிப்பாக ஐபிஎல் தொடரை நடத்த முடியாது என்பது நிச்சயம். ஒரு வேளை இதன் தாக்கம் சற்று குறைந்தாலும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பிசிசிஐ தலைவர் கங்குலி ஐபிஎல் தொடரை நடத்தி முடிப்பார் என்றே தெரிகிறது.

Advertisement