ஒருநாள் போட்டிகளில் கங்குலியின் விமர்சையான திட்டம் – ஐ.சி.சி சம்மதம் அளிக்குமா ?

Ganguly

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பிசிசிஐயின் புதிய தலைவராக பதவி ஏற்ற பின் பல அதிரடி முடிவுகளை எடுத்து அசத்தி வருகிறார். அதன் முதல் படியாக இந்தியாவில் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடத்தி அனைவரையும் அசர வைத்தார் கங்குலி அதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் குறித்த பல்வேறு ஆக்கபூர்வ அம்சங்களை செய்லபடுத்த ஆலோசனையும் செய்து வருகிறார்.

Ganguly-2

இந்நிலையில் தற்போது ஒருநாள் தொடரிலும் அடுத்த அதிரடிக்கு தயாராகியுள்ளார் கங்குலி. அதன்படி ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் அணிகளாக இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இன்னொரு அணியும் சேர்த்து நான்கு நாடுகள் கொண்ட சூப்பர் தொடர் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் இடம் கங்குலி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்படி இந்த பேச்சுவார்த்தை சரியாக அமையும் பட்சத்திலும், ஐ.சி.சி இதற்கு அனுமதிக்கும் பட்சத்திலும் 2021 ஆம் ஆண்டு முதல் இந்த சூப்பர் தொடர் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் தொடர் நடைபெறும் என்றும் இந்த திட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனை கங்குலி தெரிவித்துள்ளார்.

Ganguly

இந்நிலையில் இது சாத்தியமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் ஐசிசி அதிகபட்சமாக மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு போட்டியில் மட்டுமே அனுமதி இதுவரை வழங்கியுள்ளது. பெரிய தொடர்களாக இருந்தால் அதனை ஐசிசி நடத்துவது வழக்கம். எனவே முத்தரப்பு தொடர் தான் அதிகபட்சம் நடத்த முடியும் மேலும் கங்குலி திட்டமிட்டபடி இந்த சூப்பர் தொடரை நடத்த முடியுமா என்பதில் சந்தேகம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -