இனிவரும் அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இது நடைமுறை படுத்தப்படும் – கங்குலி அதிரடி

Ganguly

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற இருக்கிறது என்பதனை கங்குலி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

Ground

துவக்கத்தில் பகல் இரவு டெஸ்ட் போட்டி குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் இருந்தும் கிரிக்கெட் விமர்சகர்கள் என அனைவரிடமும் நேர்மறையான விமர்சனங்கள் வந்தன. எனவே இனி வரவிருக்கும் ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் இந்தியாவில் குறைந்த பட்சம் ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என்ற திட்டம் பி.சி.சி.ஐ யிடம் உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது : இந்தியாவில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிட்டிருந்தோம் இருப்பினும் அதனை உறுதி செய்யத் சற்று தங்கினோம். ஏனெனில் எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் நேர்மறையான விமர்சனங்கள் வந்தன. மக்களும் அதனைப் புரிந்து கொண்டார்கள்.

Ind

எனவே இனிவரும் தொடர்களில் ஒரு போட்டியாவது பகலிரவு போட்டியாக நடத்த முடிவு செய்ய இருக்கிறோம். இதுகுறித்து பிசிசிஐ உறுப்பினர்களிடமும், கிரிக்கெட் வாரியத்துடனும் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடமும் ஆலோசனை நடத்த இருக்கிறோம். இவை அனைத்தும் கைகூடும் பட்சத்தில் அனைத்து டெஸ்ட் தொடரிலும் ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டி நடக்கும் என்று அவர் கூறினார்.

- Advertisement -