இப்போதுள்ள இந்திய அணியில் இந்த 3 வீரர்களும் 2003 உலககோப்பை அணியில் இருந்திருந்தா நல்லா இருக்கும் – கங்குலி ஓபன் டாக்

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போதுதான் இளம் வீரராக இருந்த சௌரவ் கங்குலி அணியை தன் கையில் எடுத்தார். ஆக்ரோஷமாக வழிநடத்தினார். ஒவ்வொரு இந்திய வீரருக்கும் பெரும் நம்பிக்கையை கொடுத்தார்.

Ganguly

- Advertisement -

அப்படி உருவாகியவர்கள்தான் தோனி, விரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங், முகமது கைஃப், யுவராஜ்சிங், ஆஷிஷ் நெஹ்ரா போன்ற பல வீரர்கள் இவர்களின் மூலமாகத்தான் தற்போது வரை இந்திய அணி ஆக்ரோசமாக விளையாடிக் கொண்டிருக்கிறது என்று கூறினால் தவறல்ல . இவரது தலைமையில்தான் 2003 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்றது.

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வீரேந்தர் சேவாக், அணில் கும்ப்ளே, ஸ்ரீநாத், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் என மிகச் சிறந்த வீரர்களை தன் அணியில் வைத்திருந்தார். இருந்தாலும் அப்போது நமக்கு தோல்வியே மிஞ்சியது. அதேபோல் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் விராட் கோலி தலைமையிலான அணி மிகச் சிறந்த அணியாக இருந்தது.

Rohith

இந்த அணியும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் 2003 ஆம் ஆண்டு தனது அணியில் தற்போது உள்ள எந்த வீரர்களை தேர்வு செய்வீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியிடம் இந்திய அணியின் துவக்க வீரரான மயாங்க் அகர்வால் சமூகவலைத்தளம் மூலமாக கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

அதற்கு இன்ஸ்டாகிராம் நேரலையில் பதிலளித்த கங்குலி கூறுகையில் : விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பந்து வீச்சாளற் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூவரையும் எனது அணியில் தேர்வு செய்து கொள்வேன். காரணம் என்னவென்றால் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் தரமான வேகப்பந்து வீச்சாளர். 2003 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது.

Bumrah-2

இவர் அந்த அணியில் இருந்திருந்தால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்திருக்கும். ரோகித் சர்மா துவக்க வீரராக களம் இறக்கப்பட்டால், விராட் கோலி எப்போதும் போல் தனது வேலையைச் செய்வார் இதனால்தான் இந்த மூன்று வீரர்களையும் தேர்வு செய்வேன் என்று கூறியிருந்தார் சௌரவ் கங்குலி. 2003 ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பை அணியில் தேர்வாக இவர்கள் 3 பேரும் தகுதியானவர்கள் என்று கங்குலி குறிப்பிட்டார்.

Advertisement