இந்திய அணியில் உள்ள தற்போதைய 2 விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – கங்குலி கூறிய 2 பேர் யார் தெரியுமா ?

Ganguly
- Advertisement -

மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 16 வருடங்கள் விளையாடியவர். ஒரு மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக, மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக, ஒரு கேப்டனாக மூன்று வீரர்கள் செய்யும் வேலையை ஒரே ஆளாக செய்தவர் தோனி. அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராகவும் மாறினார் தோனி. தோனி ஓய்வு பெற்ற பின்னர் அவரது இடத்தை நிரப்ப பல்வேறு வீரர்கள் போட்டியிட்டனர். உண்மை என்னவென்றால் அவரது இடம் தற்போது வரை நிரப்பப்படவில்லை.

Dhoni

- Advertisement -

இருந்தாலும் அவ்வப்போது தற்போது இருக்கும் விக்கெட் கீப்பர்கள் யார் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற விவாதம் வந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி தற்போதைய இந்திய விக்கெட் கீப்பர்கள் இரண்டு வீரர்களை கூறி இவர்கள் தான் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்கள் என்று கூறியிருக்கிறார். அவர் கூறுகையில்…

தற்போது ரிஷப் பண்ட் மற்றும் விருத்திமான் சஹா ஆகிய இருவர் மட்டுமே இந்தியாவில் இருக்கும் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்கள். ரிஷப் பண்ட் தற்போது சரியாக ஆடுவதில்லை ஆனால் அதைப் பற்றி பெரிதாக கவலை கொள்ளத் தேவையில்லை. இன்னும் நிறைய பயிற்சி செய்தால் அவரது பழைய ஆட்டம் வந்துவிடும். நிச்சயம் ஒரு அபாரமான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை.

Pant

அதேபோன்று சஹாவும் அற்புதமான ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தான். மேலும் ஒரு நேரத்தில் அணியில் ஒரு விக்கெட் கீப்பர் தான் விளையாட முடியும் என்பதால் டெஸ்ட் போட்டிகளில் அந்த தருணத்தில் யார் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்களோ அவர்கள் தான் ஆட முடியும் என்று தெரிவித்திருக்கிறார் சௌரவ் கங்குலி .

- Advertisement -

கடந்த மூன்று வருடமாக அவரை எப்படியாவது தோனியின் இடத்திற்கு மாற்று வீரராக கொண்டு வந்துவிட வேண்டும் என விராட் கோலி திட்டமிட்டிருந்தார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ஓரளவிற்கு ஆடிய ரிஷப் பந்த் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நினைத்த அளவிற்கு ஆடவில்லை. இதன் காரணமாக அவருக்கு மாற்றாக கேஎல் ராகுல் தற்போது விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டெஸ்ட் தொடருக்கு தொடர்ந்து சஹா விளையாடி வருகிறார். உலகின் தலைசிறந்த டெஸ்ட் விக்கெட் கீப்பர் இவர்தான் என்று கோலி ஏற்கனவே பாராட்டுகளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement