கோலி பயந்துபோய் தோடை நடுங்கியிருப்பார் ..! இந்திய வீரர் அதிரடி பேட்டி..! – எதற்கு தெரியுமா..?

virat

வரும் ஜூலை மாதம் 11 ஆம் தேதி மாதம் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் , 5 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து செல்ல விருக்கிறது. இந்த தொடரில் விளையாடுவதற்கான இந்திய வீரர்கள் ஏற்கனவே தேர்வாகி விட்டனர். இந்த தொடரை நினைத்து கோலி தொடை நடுங்கி கொண்டிருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார்.
Virat-Kohli
தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றவுடன் டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார். மேலும் தற்போது இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டனாக கோலி செயல்படவுள்ளார். இந்த போட்டி இந்திய அணிக்கு மட்டும் இல்லை விராட் கோலிக்கு மிக முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணமே கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. அந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 10 இன்னிங்ஸிலும் சேர்த்தே கோலி வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். எனவே, இந்த தொடரில் ஒரு கேப்டனாக கோலி சிறப்பாக ஆட வேண்டிய அவசியம் உள்ளது.
ganguly1

சமீபத்தில் இந்த தொடரில் பங்குபெற போகும் கோலியின் மனநிலை குறித்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி’விராட் கோலி தலைசிறந்த வீரர்,இங்கிலாந்து தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.கடந்த முறை இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத பயம் கோலியிடம் இருந்தது. ஆனால் இந்த தொடரில் அவர் சிறப்பாக ஆடுவார்’ என்று தெரிவித்துள்ளார்.