உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : கங்குலியும், ஜெய் ஷாவும் நேரில் பார்க்க செல்லவில்லை – காரணம் இதுதான்

jaysha
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த இறுதிபோட்டிக்க்கான இந்திய அணி நாளை இங்கிலாந்து புறப்பட உள்ளது. கடந்த 19ஆம் தேதி இந்த தொடரில் இடம் பெற்றுள்ள அனைத்து இந்திய வீரர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் துவங்கினர். அதன்படி அவர்கள் தற்போது தனிமைப் படுத்துவதற்கான காலம் முடிந்து நாளை இங்கிலாந்து செல்ல உள்ளனர்.

INDvsNZ

இந்நிலையில் இந்த முக்கியமான இறுதிப் போட்டியை நேரில் காண்பதற்காக பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் பொருளாளர் ஜெய் ஷா ஆகியோர் செல்லவில்லை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து செல்லும் வீரர்களுடன் குடும்பத்தினர் வருவதற்கும் பிரிட்டன் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது மிக்க மகிழ்ச்சி.

- Advertisement -

வீரர்கள் குடும்பத்துடன் இருப்பதால் அது வீரர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மேலும் வீரர்களின் நல்ல மனநிலைக்கும் அது உதவும். அதே போல இந்த முக்கியமான இறுதி போட்டியை காண கங்குலியும்.ஜெய் ஷாவும் நேரில் செல்லவில்லை என்று கூறினார். மேலும் அது குறித்த தகவலுக்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

jay shah

எனக்கு தெரிந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர்கள் இருவரும் வருவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ஏனென்றால் மைதானத்தில் நேரில் சென்று இந்த இறுதிப்போட்டியை பார்ப்பதற்கு முன் முறையாக கடுமையான குவாரன்டைன் முறையை கடைபிடிக்க வேண்டும். இதனால் நிறைய நாட்கள் வீணாகும் என்பதால் இவர்கள் இருவரும் போட்டியை நேரில் காண செல்லவில்லை என்று அந்த பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

jay shah

மேலும் கடினமான இந்த குவாரண்டைன் காரணமாக இந்த இறுதிப் போட்டியை அவர்கள் பார்க்கவில்லை என்றாலும் இந்தியா இங்கிலாந்து தொடரில் ஒரு போட்டியை காண அவர்கள் இருவருக்கும் அனுமதி அளிக்குமாறும் பிசிசிஐ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement