இந்திய – இங்கிலாந்து தொடர்..! பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா..! போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளே..!

kohli

இந்திய அணி தற்போது ஐயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் 5 டெஸ்ட், 3 ஒரு நாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாட்டுள்ளது.

அடுத்த ஆண்டு உலக கோப்பை இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இதனால் இங்கிலாந்தில் நடைபெற உள்ள இந்த தொடர் இந்தியாவிற்கு மிகவும் ஒரு முக்கியமான தொடராக கருதப்படுகிறது. அதே போல உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து மண்ணில் ஆடும் இந்த தொடர், இந்திய அணிக்கு ஒரு ஆயுத்த பயற்சியாகவும் இருக்கும்.

இந்த தொடர் இந்தியாவிற்கும், கோலிக்கும் மிகவும் முக்கியமான ஒரு தொடராகும். ஏனெனில் கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. மேலும், இந்த தொடரில் கோலி 10 இன்னிங்ஸ்களில் 135 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.
koli
எனவே, இம்முறை இந்திய அணியை தலைமையேட்றுள்ள கோலி, இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத்தருவதோடு, அவரும் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், இந்த தொடரில் சுவாரசியமான பகுதியாக இந்திய வீரர்களின்

சுனில் கவாஸ்கர்,
சஞ்சய் மஞ்சரேக்கர்
கங்குலி
நெஹ்ரா

போன்ற முன்னாள் இந்திய வீரர்களும் இந்த தொடரின் வர்ணனையாளராக செயல்படப்போகின்றனர் என்பது மற்றும் ஒரு பிளஸ். அதனால், இங்கிலாந்து மற்றும் இந்தியா மோதும் இந்த தொடரரில் ஸ்வாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது என்று கூறலாம்.