சச்சினுக்கு இப்படி ஒரு வியாதி இருக்கிறதா.? பொது நிகழ்ச்சியில் ரகசியத்தை அம்பல படுத்திய கங்குலி.!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி சமீபத்தில் “பிரேக் பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்போது தன் வாழ்வில் நடந்த பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். சிறுவயதிலுருந்தே சச்சினுடன் அதாவது 14 வயது முதலே அவரும் சச்சினும் ஒன்றாக கிரிக்கெட் பயிற்சி எடுத்ததாகவும் வினோத் காம்பிளி சச்சின் மற்றும் இவர் ஆகிய மூவரும் ஒரே அறையில் தங்கியதாக கூறினார்.

sachin ganguly

பேட்டியின் போது மேலும் சுவாரசியமான நமக்கு இதுவரை தெரியாத ஒரு ரகசியத்தை பகிர்ந்து கொண்டார்.அதாவது மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் அவர்களுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளதாக அவர் கூறினார். இந்திய அணி ஒருமுறை இங்கிலாந்துக்கு விளையாட சென்றபோது சச்சினுடன் ஒரு அறையில் தங்கியதாகவும் இவரின் படுக்கைக்கு அருகில் சச்சினுடைய படுக்கை இருந்ததாகவும் நள்ளிரவில் எழுந்து பார்க்கும் போது சச்சின் அங்கு இல்லையாம்.

அவரை காணவில்லையே என்று ஹோட்டலின் வெளியே சென்று பார்த்த போது சச்சின் நடந்து கொண்டிருந்தார் திரும்பி வரும்போது கூட தன்னை கண்டுகொள்ள வில்லை மறுபடியும் அறைக்கு சென்று படுத்து விட்டார். அடுத்த நாள் காலை உணவு உண்ணும் போது இரவு நடந்ததை பற்றி கேட்டதற்கு தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளதாக சச்சின் தன்னிடம் கூறியதாக கங்குலி தெரிவித்தார்.

sachin ganguly 2

அதுவரை தன்னை பயமுறுத்தவே அவ்வாறு செய்தார் என நினைத்தேன் ஆனால் அவர் கூறிய பிறகுதான் அவருக்கு இப்படி ஒரு வியாதி உள்ளது தனக்கு தெரிந்ததாக கூறினார்.சிறுவயதிலிருந்து இன்று வரை தங்களுக்குள் நல்ல ஆழமான ஆரோக்கியமான நட்பு இன்று வரை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார். இவர்கள் இருவரும் வரலாற்றில் இடம்பிடித்த சிறப்பு வாய்ந்த ஆபத்தான தொடக்க ஆட்டக்காரர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.!