நிச்சயம் இந்திய அணி திருப்பி அடிக்கும். முன்னாள் கேப்டன் நம்பிக்கை – விவரம் இதோ

india

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Finch

நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது, நாளைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணியும், தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணியும் விளையாட இருப்பதால் இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி : இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கின்றன அதில் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார்கள் என்றும் இந்திய அணி மீண்டும் வலிமையுடன் திரும்பும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதலாவது போட்டி இந்திய அணிக்கு மோசமான நாளாக அமைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி இது போன்று பல முறை தோல்வியிலிருந்து மீண்டு வந்திருக்கிறது என்றும் இந்திய அணி மீண்டும் முழுபலத்துடன் திரும்பும் என்றும் குறிப்பிட்டு குட்லக் என வாழ்த்துக்களையும் கங்குலி தெரிவித்துள்ளார். கங்குலியின் இந்த பதிவு இணையத்தில் வைரலானது மட்டுமின்றி ரசிகர்களின் கருத்துகளையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -