இந்திய அணி இதை மட்டும் பண்ணா போதும். ஈஸியா நியூசிலாந்தை வீழ்த்திடலாம் – கங்குலி அறிவுரை

Ganguly
Ganguly
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று துவங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட அதன் காரணமாக முதல் நாள் போட்டி விளையாடலயே ரத்து செய்யப்பட்டது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 6 பேட்ஸ்மென்கள், இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என வலுவான அணியாக களமிறங்குகிறது.

indvsnz

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பல்வேறு அணிகளையும் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தாலும் நியூசிலாந்து அணி தான் இந்த போட்டியில் சாதகமான அணி என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நியூசிலாந்து அணியை வீழ்த்த இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ-யின் தலைவருமான சௌரவ் கங்குலி ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்லும் என நம்புகிறேன். நியூசிலாந்து அணியும் சிறப்பான அணி என்பதால் இந்த வெற்றி என்பது எளிதாக கிடைக்காது. இந்திய அணி சமீபமாகவே வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. எனவே நிச்சயம் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தால் இந்திய அணியின் வெற்றிக்கு அது மிகவும் உதவும் என அறிவுரை கூறியுள்ளார்.

ind

மேலும் 2002ஆம் ஆண்டு லீட்ஸ் டெஸ்ட் மற்றும் 2018 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் என பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் கூட இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து போட்டியை வென்று உள்ளது. இதன் காரணமாக டாஸ் ஜெயித்தால் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யவேண்டும். துவக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளிக்கும் பட்சத்தில், மிடில் ஆர்டரில் அனைவரும் தங்களது பங்களிப்பை அளித்தாலே இந்திய அணி எளிதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி விடும்.

IND

கடந்த 30-35 ஆண்டுகளில் நியூசிலாந்தின் சிறந்த அணி இதுதான். எனவே அவர்களை இந்திய அணி பக்குவமாக எதிர்கொள்ளவேண்டும். சமீபத்தில் தான் அவர்கள் இங்கிலாந்து மண்ணில் அவர்களை வீழ்த்தியுள்ளார்கள் என்பதால் அவர்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள் எனவும் கங்குலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement