இந்திய அணியின் டி20 வீரர்களின் வரிசை ஒருநாள் போட்டிகளில் இருப்பது போன்று அல்லாமல் சற்று மாறுபட்ட கலவையாக உள்ளது. அணியில் ஏகப்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களை விளையாட வைக்கும் இந்திய அணி அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்காக அவர்களை தயார் செய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை குறித்தும் அந்த தொடரில் பங்கேற்க உள்ள இளம் வீரர்கள் குறித்தும் கங்குலி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணி தற்போது அணி வீரர்களை தேர்வு செய்து வாய்ப்பளித்து வருகிறது.
நமது அணியில் உள்ள இளம் வீரர்கள் பலர் சிறப்பான வீரர்கள் அவர்களுக்கு தேவையான வாய்ப்பு அளித்து அவர்களின் ஆட்டத்தில் முன்னேற்றம் அடையவைக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள வீரர்களில் தவான், ரோகித், ஜடேஜா மற்றும் பாண்டியா ஆகியோர் தங்களை நிரூபித்து விட்டார்கள் அவர்களைப் போன்று இளம் வீரர்களும் தங்களது இடத்தை உறுதி செய்து அவர்களை நிரூபிக்க வேண்டும்.
அவ்வாறு நிரூபித்தால் தான் அவர்கள் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க முடியும். எனவே இளம் வீரர்கள் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் சாதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் இதனை அவர்கள் ஒரு அடித்தளமாக கொண்டு தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கங்குலி அறிவுரை கூறியது குறிப்பிடத்தக்கது.