டி20 உலகக்கோப்பைக்கு முன்னர் கோலி மற்றும் சாஸ்திரிக்கு கிளாஸ் எடுக்கவிருக்கும் கங்குலி – அவரே சொன்ன தகவல்

Ganguly
- Advertisement -

சென்ற மாதம் பி.சி.சி.ஐ – யின் புதிய தலைவராக கங்குலி ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதற்கடுத்து சில அதிரடி நடவடிக்கைகளை செய்து வந்த கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றத்தைக் கொண்டுவர பகலிரவு போட்டியை கொல்கத்தாவில் நடத்தி அனைத்து தரப்பினரின் வரவேற்பினைப் பெற்றார்.

ganguly

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இந்திய தேர்வு குழு உறுப்பினர்களின் நீக்கி அதிரடி காட்டியுள்ள கங்குலி அடுத்து இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளிலும் சில மாற்றங்களை செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியது. இந்நிலையில் தற்போது அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணிக்கு ஆலோசனை வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி கங்குலி கூறியதாவது : அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயாராக இந்திய அணிக்கு இன்னும் சில போட்டிகள் இருக்கின்றன. எனவே நல்ல அணியுடன் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று கோப்பையை கைப்பற்றும் என்று நான் நினைக்கிறேன். அதற்கு முன்னர் இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் கேப்டன் கோலிக்கு சில ஆலோசனைகளை வழங்க உள்ளேன்.

Ganguly 1

இதுகுறித்து உலக கோப்பைக்கு முன்னர் அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் மேலும் டி20 போட்டிகளில் எனக்குள்ள சில ஐடியாக்களை நான் அவர்களுக்கு வழங்க உள்ளேன். டி20 போட்டிகளில் பெரிய அனுபவம் எனக்கு இல்லை என்றாலும் என்னுடைய கணிப்பின்படி சில விடயங்களை நான் நிச்சயம் இவர்கள் இருவரிடமும் தெரிவிப்பேன். அடுத்த ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றுவதே நமது குறிக்கோளாக இருக்கவேண்டும் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement