யார் கூறினாலும் இவரை அணியில் இருந்து நீக்க முடியாது – கங்குலி அதிரடி

ganguly

சென்ற மாதம் பிசிசிஐயின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டார். அதன் பின்பு தற்போது இந்திய அணியின் முன்னேற்றம் குறித்து பல அதிரடி முடிவுகளை எடுத்து வரும் கங்குலி இந்திய அணியின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியையும் தற்போது திட்டமிட்டபடி நடத்த உள்ளார்.

Ganguly

அவர் பதவி ஏற்றதும் பணியில் திறம்பட செயல்பட்டு வருவதும் மற்றவர்களின் கோரிக்கைகளை கேட்பதிலும் அதிக கவனித்தை வைத்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் இருந்து சிறப்பாக செயல்படாத இளம் விக்கெட் கீப்பர் பண்ட் வெளியேற்றப்பட வேண்டும் என்று ரசிகர்களின் கேள்விக்கு தற்போது கங்குலி பதில் ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : பண்ட் ஒரு திறமை வாய்ந்த வீரர்.

அவருக்கு போதுமான அளவு நேரத்தை நாம் அவருக்கு வழங்க வேண்டும். அவர் நிச்சயம் இதிலிருந்து மீண்டு சிறப்பாக விளையாடுவார் அவர் பொறுமையாகத்தான் அனுபவத்தை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் ஒரு இளம் வீரர் எனவே அவருக்கு இன்னும் வாய்ப்புகளையும், அவருக்கான நேரத்தையும் வழங்கினால் அவர் நிச்சயம் முதிர்ச்சி அடைந்து விடுவார். அவர் இதுவரை விளையாடிய போட்டிகளை வைத்து அவரின் திறமையை முடிவு செய்ய வேண்டாம்.
அவர் நிச்சயம் சிறப்பான வீரர் என்பதை வெளிப் படுத்துவார்.

pant 6

அவருக்கான நேரம் வரும் பொழுது அவர் அதிலிருந்து தன்னை வெளிப்படுத்த ஆரம்பிப்பார். எனவே அவருக்கு தொடங்க அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது . டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானபோது சிறப்பாகவே ஆரம்பித்து இங்கிலாந்து மற்றும் விண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இடையே சதமடித்து இருந்தாலும் அதன் பின்னர் வந்த ஒரு நாள் போட்டிகள் டி20 போட்டிகள் என அனைத்திலும் தொடர்ந்து சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -