உங்களின் சாதனை இந்த 10 ஆண்டுகளாக வெளியில் தெரியாமல் போனதில் வருத்தம் – கங்குலி வேதனை

Ganguly-2
- Advertisement -

2019 ஆம் ஆண்டு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ள நிலையில் இந்த பத்து ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் சாதித்தவர்கள் குறித்த செய்திகள் தினமும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

Ashwin 1

- Advertisement -

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச பந்துவீச்சாளராக அஸ்வின் 564 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் ,மூலம் முதலிடத்தில் உள்ளார். அஷ்வினின் இந்த சாதனையின் மூலம் ஆஸ்திரேலிய அணி உருவாக்கிய கனவு டெஸ்ட் அணியில் விராட் கோலியை தொடர்ந்து அஸ்வினும் அந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதுகுறித்து கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் அஸ்வின் குறித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து மேலும் அவரைப் பற்றி வேதனை அடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடி 564 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினுக்கு வாழ்த்துக்கள். மேலும் அவரின் பல்வேறு சாதனைகள் வெளியே தெரியாமல் போனது தனக்கு வருத்தமாக உள்ளது என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தியது மூலம் முதலிடத்தில் அஷ்வின் உள்ளார். அதற்கு அடுத்து 29 விக்கெட்டுகள் குறைவாக பெற்ற இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement