கங்குலியின் கவனக்குறைவால் ஏற்பட்ட விளைவு. குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட பாதிப்பு – விவரம் இதோ

Ganguly-2
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானதும் இணையத்தில் வைரலானது. மேலும் அவர் விரைவில் உடல் நலம் தேறி வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

Ganguly (2)

- Advertisement -

இந்நிலையில் நான்கு நாட்களுக்கு பிறகு கங்குலி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஒரு முக்கிய கண்டிஷன் உடனே அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதோடு வீட்டிற்கு திரும்பிய அவருக்கு சில கண்டிஷன்களும் விதிக்கப்பட்டது.

அதன்படி கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது டெஸ்ட் ரிப்போர்ட் ஆய்வு செய்யப்படுகையில் கங்குலிக்கு ஏற்பட்டுள்ளது டெல்டா ப்ளஸ் என்கிற ஒரு உருமாறிய கொரோனா வைரஸ் என்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அவர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினாலும் சில கண்டிஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

Ganguly 1

அதன்படி இன்னும் இரண்டு வாரங்களுக்கு அதாவது 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் மருத்துவமனை நிர்வாகம் அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளது. இந்நிலையில் கங்குலியின் குடும்பத்தில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : கங்குலிக்கு ஏற்பட்டுள்ளது டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பு – முக்கிய கண்டிஷனுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

அதன்படி அவரது மகள் சனா கங்குலி மற்றும் அவரது மனைவியின் தங்கை ஜாஸ்மின் மற்றும் 2 மாமா ஆகியோருக்கு தொற்று பரவியுள்ளது. இதன் காரணமாக அனைவரும் ஒரே வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். சவுரவ் கங்குலியின் கவனக்குறைவால் இந்த பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement