கங்குலியின் குடும்பத்தையும் விட்டுவைக்காத கொரோனா. அதிர்ச்சியில் கங்குலி – விவரம் இதோ

Ganguly
- Advertisement -

உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடத் துவங்கியுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு விட்டனர். தமிழகத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் ஏழை, பணக்காரன், நல்லவர் கெட்டவர் என்று பாகுபாடு பார்த்து யாரையும் தாக்கவில்லை. பாதுகாப்பின்றி அலட்சியமாக இருந்தால் எவரையும் தாக்கிவிடும்.

Ganguly 1

- Advertisement -

இப்படித்தான் பல பிரபலங்களை தாக்கியுள்ளது. இங்கிலாந்து பிரதமர், பாகிஸ்தானின் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி ,வங்கதேசத்தின் முன்னாள் கேப்டன் முகமது மொர்டாசா என பல பிரபலங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலியின் குடும்பத்திலும் காரணம் வைரஸ் புகுந்து விட்டது.

அவர்களின் மூத்த சகோதரர் சினேகாஷிசின் மனைவிக்கு தற்போது கரோனா பாசிட்டிவாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ,அவருடைய மாமியார் மற்றும் மாமனாருக்கும் கொரோனவைரஸ் கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையின் அறிவுரைப்படி தனி வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Ganguly brother

சௌரவ் கங்குலி யின் மூத்த அண்ணன் சினேகாஷிஸ் பரிசோதனை நெகட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தற்போது அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து இவர்கள் அனைவருக்கும் சிகிச்சைக்கு கொடுக்கப்படுமா அல்லது நிறுத்தப்படுமா என்பது பற்றி தெரிந்துவிடும்.

ganguly family

மேலும் இதன் காரணமாக கங்குலியின் குடும்பத்தினரும் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர். இதனால் கங்குலியின் குடும்பத்தினர் சற்று பதற்றத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement