நான் இப்படி நடக்கும்ன்னு நெனச்சிக்கூட பாக்கல. ரொம்ப கஷ்டமா இருக்கு – மனம் வருந்தி கலங்கிய கங்குலி

Ganguly 1

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 3 லட்சத்து 34 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த நோய் தொற்றினால் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் அச்சம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் உலக அளவில் 67 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு பரவிய இந்த வைராஸ் அடுத்த 11 நாட்களில் 1 லட்சம் பேருக்கு பரவியுள்ளது.

Corona-1

அதன்பின்னர் நான்கு நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேருக்கு இந்த வைரஸ் பரவி தற்போது இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை சுமார் 17 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்த வரை 500க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த கொடிய வைரஸினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் எடுத்து வருகின்றன.

corona 1

அனைத்து மாநிலங்களுக்கும் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று மாலை 6 மணியிலிருந்து ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே திரையரங்குகள், மால்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

- Advertisement -

மேலும் இதேபோல் மேற்கு வங்க மாநிலம் முற்றிலும் முடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் தடை உத்தரவை மீறி வெளியே நடமாடிய மக்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்கும் நிலைமையும் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒட்டுமொத்த மேற்குவங்க மாநிலமும் முடங்கிப் போயுள்ளது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் குறிப்பிட்டதாவது : “எனது நகரத்தை இதுபோன்று நான் பார்ப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” விரைவில் இவை அனைத்தும் மாறும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைவருக்கும் எனது அன்பும் பாசமும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.