கொரோனா பாதிப்பு : ஏழை மக்களுக்கு ரூபாய் 50 லட்சத்துக்கு உதவி. யாரும் யோசிக்காததை செய்த கங்குலி – உண்மையான தலைவன்

Ganguly-2
- Advertisement -

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சீனாவைவிட இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வைரசிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Corona-1

- Advertisement -

உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 5 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் கிட்டத்தட்ட 21 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவிலும் பரவிய கொரோனாவினால் மக்கள் தற்போது பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 629 ஆகும். மேலும் 13 பேர் பலியாகியுள்ளனர்,

இதிலிருந்து இந்திய மக்களை காக்க அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக தினக் கூலி வேலைக்கு செல்பவர்கள் இல்லாமல் தெருவோரம் தங்கியிருக்கும் ஏழைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும்.

corona 1

இந்நிலையில், ஆதரவற்ற வரும் கூலித் தொழிலாளிகளும் பள்ளிகள். அரசு ஒதுக்கிய முகாம்கள் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக 50 லட்சம் மதிப்பிலான அரிசியை இலவசமாக வழங்குவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தற்போதைய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

- Advertisement -

இவ்வாறு அவர் வழங்கும் அரிசி உணவின்றி தவிக்கும் மக்களுக்காக வழங்கப்போவதாக கங்குலி தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உணவின்றி தவிக்கும் மக்களுக்காக அவ்வோப்போது உணவும் தயாரித்து வழங்கப்படுகிறது.

Ganguly

இந்த கொரோனா பாதிப்பினால் முடங்கிப்போய் இருக்கும் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்த போதும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்களும் தங்களது உதவிகளை செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் 50 லட்சம் நிதி வழங்கினார். பதான் சகோதரர்கள் 4000 முகக்கவசம் ஆகியவற்றை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement