உங்களுடைய நேரம் முடிந்துவிட்டது நீங்கள் கிளம்புங்க – கங்குலி அதிரடி

Ganguly-2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தேர்வுக்குழு ஐந்து முக்கிய நபர்களை கொண்டது. இந்த தேர்வு குழுவின் தலைவராக எம்எஸ்கே பிரசாத் செயல்பட்டு வருகிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த குழுவினர் மீது கடும் விமர்சனம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்திய அணி நான்காவது வீரர் மற்றும் இந்திய அணியின் தேர்வு மற்றும் வீரர்களின் வாய்ப்பு என நாளுக்கு நாள் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மீது விமர்சனம் எழுந்தது.

Prasad

- Advertisement -

இந்நிலையில் இந்தத் தேர்வுக் குழுவினரின் பதவிக்காலம் கடந்த 1-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும் இந்த குழுவிற்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வாய்ப்பு இருந்தும் கங்குலி அவர்களை தற்போது கால அவகாசத்தை கொடுக்காமல் நீக்குவதற்கான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்திய தேர்வுக் குழுவின் தலைவரான எம்எஸ்கே பிரசாத் 2015ஆம் ஆண்டு முதல் தேர்வுக்குழு தலைவராக செயல்பட்டு வருகிறார்.

மேலும் அவருடன் இருக்கும் ஐந்து உறுப்பினர்களும் குறைந்த அளவிலான சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார்கள். மேலும் அவர்கள் எப்படி இந்த பெரிய பதவிக்கு தகுதி என்று பலரும் விமர்சித்து வந்தநிலையில் தற்போது கங்குலி அவர்களை நீக்கி உள்ளார். ஏனெனில் டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த கருண் நாயருக்கு நீண்ட காலமாக வாய்ப்பு தராதது இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடும் போதும் கோலி கூறிய வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தந்தது என அடுத்தடுத்து பிரச்சினைகளில் அவர் சிக்கினார்.

Prasad

அதேபோல ஒரு தொடரில் சிறப்பாக விளையாடி அடுத்த தொடருக்காக காத்திருக்கும் வீரர்கள் வெளிப்படையாக அவரது தேர்வு குறித்து விமர்சித்து வந்ததும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இந்த தேர்வுக் குழுவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தற்போது நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்த இந்த குழுவிற்கு ஐந்தாவது ஆண்டாக இன்னும் கூடுதலாக ஒரு ஆண்டு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

Ganguly

ஆனால் இப்போது அவர்களை கங்குலி வீட்டிற்கு அனுப்பி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பிசிசிஐ கூட்டத்தில் இது குறித்து பேசி அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது மேலும் அவர்களுக்கு பதவி காலத்தை நீட்டிக்க முடியாது அவர்கள் சிறப்பாகவே செயல்பட்டார்கள் என்றாலும் விதிமுறைப்படி அவர்களை பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement