ஐ.பி.எல் முடிந்ததும் இந்திய அணி மோதும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுதான் – உறுதிசெய்த கங்குலி

Ganguly

ஐபிஎல் தொடர் நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற முடிந்துவிடும். அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடத்தப்படுகிறது என்று உறுதியாகியுள்ளது. மேலும் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் என ஒரு நீண்ட தொடர் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது.

இந்த தொடர் முடிந்தவுடன் இந்தியாவிற்கு இங்கிலாந்து அணியில் இருந்து 5 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் ஒரு போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு தலைவர் சௌரவ் கங்குலி அறிவித்திருக்கிறார்.

இந்த டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என்றும் அவர் கூடுதலாக தெரிவித்திருக்கிறார். இந்த போட்டியின் மூலம் இந்தியாவில் இரண்டாவது முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெறப் போவது உறுதியாகி உள்ளது. இந்த போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான “மோதிரா மைதானத்தில்” (Motera Stadium ) நடைபெற அதிக வாய்ப்புள்ளது.

motera

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே கொல்கத்தாவில் இரவு பகல் டெஸ்ட் போட்டி நடந்தது. இதுகுறித்து கங்குலி பேசுகையில் : இங்கிலாந்து தொடரை எந்த மைதானங்களில் நடத்துவது என்று பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது.இதற்காக நாங்கள் திட்டத்தை வைத்துள்ளோம். ஆனால் தொடர் துவங்குவதுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருப்பதால் தற்போது வரை தேதிகளை இறுதி செய்யவில்லை.

- Advertisement -

INDvsENG

ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாட்களில் தேர்வு செய்யப்படும்
அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அப்போது ரஞ்சி கிரிக்கெட் போட்டியை எப்படி நடத்துவது எவ்வாறு நடத்துவது எப்போது நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வோம் இவ்வாறு தெரிவித்துள்ளார் சௌரவ் கங்குலி.