மூன்று நாட்கள் இல்ல. நன்கு நாட்கள் ஓவர். செம ட்ரீட் காத்திருக்கு – கங்குலி உற்சாகம்

Ganguly
- Advertisement -

இந்திய அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி வரும் வெள்ளிக்கிழமை 22 ஆம் தேதி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.

Ground

- Advertisement -

இந்த போட்டிக்காக ஏற்கனவே கொல்கத்தா வந்த இரு அணி வீரர்களும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டி நடைபெற உள்ள ஈடன் கார்டன் மைதானம் இந்தியாவிலேயே மிகப் பெரிய மைதானம் என்பதால் இங்கு 67 ஆயிரம் பேர் அமரக்கூடிய மிகப்பெரிய பெவிலியன் உள்ளது.

இந்த போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் இருப்பதாகவும் மேலும் ஆன்லைனிலும் சரி நேரிலும் சரி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. முதல் மூன்று நாட்களுக்கு அரங்கம் முழுவதும் ஆர்ப்பரிக்கும் கூட்டம் இருக்கும் என்று ஏற்கனவே கங்குலி தெரிவித்திருந்தார். இந்நிலையில் போட்டியின் மீது எதிர்பார்ப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவு எகிறி உள்ளதால் தற்போது நான்காவது நாட்களுக்கும் சேர்த்து டிக்கெட் முழுவதுமாக விற்று தீர்ந்து உள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

Indian-Fans

மேலும் வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் இது ஒரு புதுவிதமான ட்ரீட்டாக அமையும் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெறும் என்றும் மேலும் அதிகமான எண்ணிக்கையில் ரசிகர்கள் வர இருப்பதால் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கங்குலி திட்டமிட்டுள்ளார். மேலும் வீரர்களின் பாதுகாப்பு ரசிகர்களின் சூழல் என அனைத்தையும் சிறப்பாக மேற்கொள்ள ஏகப்பட்ட வழிமுறைகளையும் இந்த போட்டியில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

fans

இந்த போட்டியை காண மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் என அனைவரும் மைதானத்தில் திரள உள்ளதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் இரு மடங்காகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement