யார் சொன்னாலும் பிரச்சனை இல்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் பும்ராவை ஆதரித்து பேசிய கங்குலி – விவரம் இதோ

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் காயம் குணமாகி சர்வதேச போட்டிகளுக்கு பும்ரா திரும்பி உள்ளார். அவரை இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணி தேர்வு செய்துள்ளது.

Bumrah

- Advertisement -

இந்நிலையில் தற்போது அவரை தேர்வுக் குழுவினர் இந்த சர்வதேச தொடர்கள் தொடங்கும்முன் ரஞ்சி கோப்பையில் பங்கேற்று குஜராத் அணி விளையாடும் போட்டியில் விளையாடுமாறு கேட்டுக்கொண்டது. மேலும் அவர் குஜராத் அணியில் விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இந்த ரஞ்சி கோப்பை போட்டியில் பும்ரா ஆட விருப்பமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு முக்கிய காரணம் யாதெனில் காயம் காரணமாக இவ்வளவு நாள் ஓய்வில் இருந்து மீண்டும் டெஸ்ட் போட்டியில் ஆடிய ஆடினால் அதனால் டி20 போட்டியில் தான் சிறப்பாக செயல்படாமல் போய்விடும் என்றும் இதனால் எனது கவனம் சிதற வாய்ப்புள்ளது என்றும் எண்ணி இந்த ரஞ்சிப் போட்டியில் விளையாட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார். இதனை கங்குலியிடம் கொண்டு சென்றுள்ளார் பும்ரா.

Bumrah

பும்ரா தான் ரஞ்சி போட்டிகளில் விளையாட வேண்டாம் என்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதால் நான் இந்த ரஞ்சிப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் நினைக்கிறேன் இதனை நீங்கள் யோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் கங்குலியிடம் முறையிட்டுள்ளார். இதே கருத்தைத்தான் ரவிசாஸ்திரி மற்றும் கோலி ஆகியோரும் யோசிக்கின்றனர். உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டாம் அவர் வலைப்பயிற்சியில் நன்றாக பந்து வீசியதால் நேரடியாக இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடருக்கு அவரை இறக்கலாம் என்று யோசிக்கின்றனர்.

Bumrah

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய கங்குலி கூறுகையில் : அதன்படி ரஞ்சி கோப்பையில் பும்ரா ஆட வேண்டாம். அவர் இப்போது குறைந்த ஓவர் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தவும் மேலும் நியூசிலாந்து தொடருக்கு முன்னர் வேண்டுமானால் அவர் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கட்டும் அதுவரை அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நேரடியாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கலாம் என்றும் கங்குலி கருத்தினை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement