கங்குலி, சேவாக் ஆகியோர் பயிற்சியாளர் ஆக வாய்ப்பே இல்லை – ஸ்ட்ரிக்ட்டாக மறுக்கும் பி.சி.சி.ஐ

Sehwag
- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் உலகக் கோப்பைத் தொடரோடு முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து வரவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்காக அவருக்கு 45 நாட்கள் மேலும் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.

sourav-ganguly-ms-dhoni

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 30ஆம் தேதி வரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சேவாக் மற்றும் கங்குலி ஆகியோர் பயிற்சியாளராக மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதற்கு காரணம் யாதெனில் பி.சி.சி.ஐ கொண்டு வந்த அதிரடி விதிகள் ஆகும். பிசிசிஐ கொண்டுவந்த விதிமுறைப்படி பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிடும் நபர்கள் 30 டெஸ்ட் போட்டி மற்றும் 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது மூன்று ஆண்டுகள் உள்ளூர் அணிக்கு பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்ற சிக்கல் தான்.

Sehwag

இதில் கங்குலி மற்றும் சேவாக் ஆகியோர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் பயிற்சியாளராக அனுபவம் இல்லாமல் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் கூட ஆலோசகராக இருந்து உள்ளார்களே தவிர பயிற்சியாளராக பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர்களால் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக தற்போது ரவிசாஸ்திரியின் பயிற்சியாளர் பதவி மீண்டும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Advertisement