கங்குலிக்கு இரண்டாவது முறையாக ஏற்பட்ட நெஞ்சுவலி. என்ன நடந்தது – மருத்துவர்கள் அளித்த தெளிவான தகவல்

Ganguly (2)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இந்த மாதத் துவக்கத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் கொல்கத்தாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Ganguly

பின்னர் சில நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார். அதனை தொடர்ந்து நல்ல உடல் நலத்துடன் இருந்த சௌரவ் கங்குலி புதன்கிழமை அன்று மீண்டும் அந்த மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. வழக்கமான பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனைக்கு நேரில் வந்ததாக முதலில் மருத்துவர் நிர்வாகம் ஒரு தகவலை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மீண்டும் அவருக்கு இரண்டாவது முறையாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி புதன்கிழமை அன்று மருத்துவமனைக்கு வந்த கங்குலியின் உடல் நலம் பரிசோதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் இதயத்துக்கு ரத்தம் செல்லும் குழாய்களில் அடைப்பு இருந்தால் இரண்டு ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டதாக மருத்துவமனை சார்பில் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

Ganguly

மேலும் இதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் இது அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைக்காக செய்யப்பட்ட ஒரு சிகிச்சை எனவும் முறையான தகவலை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கங்குலிக்கு இம்மாத துவக்கத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்ட பிறகு தற்போது மீண்டும் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக சற்று சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -