கோலி பற்றி பேசிய கங்குலி

ganguly

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அடுத்தடுத்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் விராட்கோலியின் தலைமையிலான இந்திய அணி வெற்றிவாகை சூடிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ganguly1

முந்தைய இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களில் இந்தியா தோல்வியை தழுவியிருந்தாலும் இம்முறை புத்துணர்ச்சியுடன் விளையாடி வெற்றிபெரும் என்கிறார் கங்குலி.

இந்திய அணியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மிகச்சிறப்பாக உள்ளது எனவும், புவனேஷ் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் நேரத்திற்கேற்ப சிறப்பாக செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.

கோலி பேட்டிங் :

கோலி பேட்டை எடுத்தால் ரன் எடுக்காமல் ஓய மாட்டார். கோலியின் பேட்டிங் அபாரமானது.
இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் வலிமை கோலியின் பேட்டிங்கிற்கு உள்ளதென புகழாரம் சூட்டியுள்ளார்.சமீபகாலங்களில் இந்தியா மிகவும் அபாயகரமாக விளையாடி வருகின்றது என தொடர்ந்து கூறிவருகின்றார் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -