தன்னை தானே கலாய்த்துக்கொண்ட கம்பிர்.! ட்விட்டரில் வெளிட்ட புகைப்படம்..!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த கம்பீர் சில ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பை பெறாமல் இருந்து வருகிறார். சில ஆண்டுகளாக தனது ஆடடகில் சாறுகளை கண்ட கம்பீர் சில இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடி வந்தார்.

duckout

ஆனால் கம்பீரின் கேட்ட நேரம் அவரை விடுவதாக இல்லை, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த கம்பீர் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மிகவும் சிரமப்பட்டார். இதனால் அவர் மீது பல விமர்சனங்கள் எழ தனது கேப்டன் பதிவியை ராஜினாமா செய்தார்.

ஐபிஎல் தொடர் முடிந்து தனது நேரத்தை தனது குடும்பத்தினருடன் செலவழித்து வருகிறார் கம்பீர், அதிலும் குறிப்பாக தனது மகள் ஆஷீனுடன் தனது ஒய்வு நேரத்தை செலவழித்து வருகிறார். சமீபத்தில் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

gautham

இந்நிலையில் சமீபத்தில் தனது மகள் புகைப்படத்தில் தனது புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்ட கம்பீர் தன்னைத்தானே கலாய்த்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தனது மகள் ஒரு டொனால்டு டக் பொம்மையுடன் நின்று கொண்டிருக்கிறார். மற்றுமொரு புகைப்படத்தில் கம்பீர் இருக்கிறார். அதில் கம்பீர் இருக்கும் புகைப்படத்தில் “2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் , தொடர்ந்து 3 முறை ‘டக் ‘ பின்னர் பட்டம் ” என்று பதிவிட்டுள்ளார். இதில் 2014 ஆம் ஆண்டு தான் டக் அவுட் ஆனா விடயத்தை தானே கம்பீர் நினைவு கூர்ந்து , தன்னை தானே கிண்டல் செய்துள்ளார் கம்பீர்.