தோனி எங்களிடம் கூறியது என்ன இப்போது செய்வது என்ன ? கம்பீரின் அதிரடி கருத்து.

2019 உலகக்கோப்பை தொடரோடு தோனி ஓய்வுபெறுவார் என்று பலர் நினைத்தனர். 2019 உலகக்கோப்பையும் முடிவடைந்து விட்டது ஆனால் தோனியின் முடிவு என்னவென்று அவர் இதுவரை கூறவில்லை. தோனியின் சிறுவயது பயிற்சியாளரான கேசவ் பானர்ஜி, தோனி ஓய்வு பெறுவதையே அவரின் பெற்றோர் விரும்புவதாக கூறி இருந்தார். இப்படி பலரும் தற்போது தோனியின் ஓய்வு பற்றிய கருத்தை வெளிப்படையாக கூற துவங்கி உள்ளனர்.

dhoni 2

தோனியின் தற்போதைய பார்ம் அடிப்படையில் அவர் நிச்சயம் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் விக்கெட் கீப்பராக தொடரமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்தான் விக்கெட் கீப்பராக இருப்பார் என்றும், தோனி வெளியில் இருந்து பண்டிருக்கு ஆலோசனை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கெளதம் கம்பீர் தோனியின் ஓய்வு குறித்த கருத்துக்களை கூறியுள்ளார்.

அதன் படி அவர் கூறி இருப்பது என்னவென்றால், இந்திய அணியின் எதிர்கலாத்தை அனைவரும் கருத்தில் கொள்வது அவசியம். தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் அவர் அணியின் எதிர்காலம் பற்றி பெரிதும் சிந்திப்பார். ஆஸ்திரேலியாவில் தோனி கூறிய சில வார்த்தைகள் எனக்கு இன்றும் நிலையில் உள்ளது.

dhonii

காமென்வெல்த் தொடரில் நான், சச்சின், சேவாக், ஆகியோர் விளையாடுவது கடினம் என்றும், அங்குள்ள மைதானங்கள் பெரியது என்பதால் இளம் வீரர்களே அதில் சிறப்பாக ஆட முடியும் என்றும் அவர் கூறினார். அதே போல தான் தற்போதும் நாம் நடைமுறைக்கு ஏற்றவாறு பயணிக்க வேண்டுமே தவிர உணர்வுகளுக்கு பெரிதாக முக்கிய துவம் அளிக்க கூடாது. அப்படி செய்தால் அது அணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்று அவர் கூறியுள்ளனர். தோனி ஓய்வு பெற வேண்டும் என்பதையே கம்பீர் இப்படி மறைமுகமாக கூறியுள்ளார் என்று தோனி ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

- Advertisement -