இந்தியா, காஷ்மீர் பிரச்சனை…அப்ரிடி சர்ச்சை ட்வீட் … ஆஃப்ரிடியை நக்கலாக கலாய்த்த கோலி மற்றும் காம்பிர் !

Gambir1
- Advertisement -

காஷ்மீர் யாருக்கும் சொந்தம் என்கிற பிரச்சனை கடந்த ஐம்பதாண்டுகளை தாண்டியும் இன்னும் முடிந்தபாடில்லை.இந்திய மற்றும் பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காஷ்மீர் பகுதிக்கு இரண்டு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன.இதில் ஒரு பகுதியை ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றது.

gambir

- Advertisement -

இந்நிலையில் காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம் என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டு விட்டது.இருந்தபோதிலும் பாகிஸ்தானிய ராணுவம் மற்றும் சில தீவிரவாத அமைப்புகள் அடிக்கடி காஷ்மீரில் அத்துமீறி நுழைவதுடன் தாக்குதலும் நடத்தி வருகின்றது.இவர்களுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி தந்துவருகின்றது.

இந்நிலையில் காஷ்மீர் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் அப்ரிடி “இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளில் வேண்டாத்தகாக சம்பவங்கள் பல நடந்து வருகின்றன. தங்களின் விடுதலைக்காக போராடும் அப்பாவி போராளிகளின் உயிரை இந்திய அரசாங்கத்தின் துப்பாக்கி குண்டுகள் பறித்து வருகின்றன. இது ஏற்றுக்கொள்ளத்தக்க செயல் அல்ல. அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஐக்கிய நாடுகள் சபை அமைதியாக இருப்பது அதிர்ச்சியுடன் கூடிய வேதனையை அளிக்கின்றது” என்றுள்ளார்.

koli

அப்ரிடியின் இந்த சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவு குறித்து கம்பீரிடம் கருத்து கேட்டபோது “இதில் நான் கருத்து கூற என்ன இருக்கின்றது. அப்ரிடியின் பதிவு சின்னப்புள்ளத்தனமாக இருக்கின்றது. அவரை பொறுத்தவரையில் யு.என் என்றால் அண்டர் 19 கிரிக்கெட் அணி என்று நினைத்துவிட்டார் போலும். ஐக்கிய நாடுகள் சபையை பற்றி பேசியுள்ள அப்ரிடி நோ பாலில் விக்கெட் எடுத்ததை கொண்டாடுவது போல உள்ளது” என்று பதிலளித்தார்.

இதே அப்ரிடியின் கருத்து குறித்து பதிலளித்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி “அப்ரிடி விவரம் தெரியாமல் பேசுகிறார். இந்தியா ஒருபோதும் காஷ்மீரை ஆக்கிரமிக்கவில்லை. எப்போதுமே காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான். பாகிஸ்தான் தான் காஷ்மீரை ஆக்கிரமிக்க முயற்சிகளை செய்து வருகின்றது” என சாடியுள்ளார்.

Advertisement