இனியும் டைம் வேஸ்ட் பன்னாதீங்க இவருக்கு வாய்ப்பு கொடுங்க ப்ளீஸ். இளம்வீரரை ஆதரித்து – கம்பீர் ஆதங்கம்

Gambhir

இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்த ஆண்டு தற்போது நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி வரை நடக்கிறது.

samson 2

இந்த தொடரின் லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் 127 பந்தில் 20 பவுண்டரி 10 சிக்ஸர்கள் என 212 ரன்கள் குவித்து அசத்தினார். இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தற்போது இருக்கும் பண்ட் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் தற்போது சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கம்பீர் குறிப்பிட்டதாவது : சிறப்பாக விளையாடியதற்கு வாழ்த்துக்கள் சாம்சன். உங்களை போன்ற திறமையான வீரருக்கு நிச்சயம் இந்திய அணியில் விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் கம்பீரின் இந்த பதிவை இந்திய ரசிகர்கள் பலரும் கம்பீர் சொல்வது முற்றிலும் சரியானது. சாம்சனுக்கு நிச்சயம் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று அவரது பதிவை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.