சச்சின் மற்றும் தோனிக்கு தந்த மரியாதையை யுவ்ராஜ்க்கு கொடுங்கள் – கம்பீர் வேண்டுகோள்

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் 2000மாவது ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகி கிட்டத்தட்ட 19 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி சில மாதங்களுக்கு முன்பு அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். யுவராஜ் ஓய்வு முடிவை அறிவிக்கும் போது அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Yuvraj

- Advertisement -

அதன்பின்னர் யுவராஜ் தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் வெளிநாடுகளில் நடக்கும் நடைபெறும் டி20 தொடர்களிலும் விளையாடுவார் என்று அறிவித்தார். அதன்படி கனடா நாட்டில் நடந்த டி20 போட்டிகளில் பங்கேற்ற யுவராஜ் தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் யுவ்ராஜ் குறித்து பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் கூறியதாவது :

யுவராஜ் சிங் இந்திய அணிக்காக பல சிறப்பான போட்டிகளை விளையாடியுள்ளார். மேலும் 2007 மற்றும் 2011 ஆகிய உலக கோப்பையை வெல்ல அவர் முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளார். அவரது இந்த சிறப்பான பங்களிப்புக்கும், இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் ஆற்றியப் பணியையும் சிறப்பித்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது ஜெர்சி எண்ணான 12-க்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

yuvraj

ஏனெனில் அவர் மீண்டும் கிடைக்கப்பெறாத ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர் ஆவார் எனவே 12 ஆம் நம்பருக்கு ஓய்வு கொடுங்கள் என்று யுவராஜ் சிங்கை கௌரவிக்க கேட்டுக்கொண்டார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் வீரர்களான சச்சின் நம்பர் 10, தோனி நம்பர் 7 ஆகிய எண்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement