டெஸ்ட் அணியில் இவரை உட்கார வைத்த முடிவு முட்டாள்தனமானது இவர் துவக்க வீரராக ஆடவேண்டும் – கம்பீர் ஆதங்கம்

Gambhir
- Advertisement -

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. அதன்பின்னர் தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி அடுத்ததாக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்க அணியுடன் விளையாட உள்ளது.

Ind-1

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக சொதப்பலாக ஆடிவந்த ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் சர்மா துவக்க வீரராக களம் இறங்குவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது துவங்கி உள்ளதால் இனிவரும் டெஸ்ட் போட்டிகள் முக்கியமான போட்டிகளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் அளித்த பேட்டியில் டெஸ்ட் போட்டிகள் குறித்து அவர் கூறியதாவது : தற்போது உள்ள இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் ராகுல் சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவை அணியில் துவக்க வீரராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால் 15 பேர் கொண்ட அணியில் ரோகித் சர்மா இருந்தாலும் அவரை டெஸ்ட் அணியில் களமிறக்காமல் இந்திய அணி வைத்துள்ளது.

Rohith

இது என்னை பொருத்தவரை இது தவறான முடிவாகும். இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவை துவக்க வீரராக களமிறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவரை தொடக்க வீரராக களம் இறக்கினால் இந்திய அணிக்கு அது பெரிய பலனைத் தரும். மேலும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வரும் ரோஹித் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது, ரோகித் இதனை நிச்சயம் செய்து காட்டுவார் என்றும் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement