இவரை இன்னும் கேப்டனாக்காதது வருத்தமா இருக்கு. கோலியை விட இவரே பெஸ்ட் – கம்பீர் அதிரடி

Gambhir

13வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று விட்டது. டெல்லி அணியை எதிர்த்து ஆடிய அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி விட்டது. இத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணி 5 கோப்பைகளை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.

Rohith

இந்த ஐந்து கோப்பைகளையும் அந்த அணிக்கு கேப்டனாக இருந்து ரோகித் சர்மா தான் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். ஒரு வீரராக 6 கோப்பையை வென்றுள்ளார் ரோகித் சர்மா. ஐந்து கோப்பையை வென்றுள்ள ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ரோகித் சர்மாவை இந்திய டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோர் கூறியுள்ளனர் . மேலும், தொடர்ந்து இந்த கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. எப்போதும் போல் ஏதாவது சர்ச்சையாக பேசும் கௌதம் காம்பீர் இந்த விஷயத்திலும் பேசியிருக்கிறார் அவர் கூறுகையில்…

Rohith

ரோகித் சர்மா 5 கோப்பைகளை வென்று விட்டார் இதற்கு மேல் அவர் ஒரு சிறந்த கேப்டன் என்று நிரூபிக்க என்ன தகுதி வேண்டும். விராட் கோலி டி20 அணிக்கு கேப்டனாக இருக்க தகுதியற்றவர். சொல்லப்போனால் விராட் கோலியை விட ரோகித் சர்மா தான் சிறந்த டி20 கேப்டன். இரு வடிவத்திற்கு விராட் கோலியும், குறுகிய வடிவம் போட்டிகளுக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக இருக்க வேண்டும்.

- Advertisement -

Rohith

இதற்கு மேலும் அவரை கேப்டனாக ஆ கவில்லை என்றால் அது இந்திய அணிக்கு துரதிஷ்டம் தான் இத்தனை ஆண்டு காலம் அவரை கேப்டனாக நியமிக்காதது வெட்கக்கேடாக இருக்கிறது. தகுதி என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ரோகித் சர்மாவிற்கு அந்த தகுதி இருக்கிறது சீக்கிரமாக அவரை டி20 கேப்டனாக்குங்கள் என்று தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர்.