தோனி இனி வேண்டாம். அவருக்கு பதிலாக இவரை தேர்வு செய்யுங்கள் – கம்பீர் காட்டம்

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியான நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திற்கு பிறகு இன்னும் இந்திய அணிக்காக விளையாட வில்லை. அவர் விளையாடி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியதால் பிசிசிஐ அவரை ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கியது. இதனால் தோனி மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவது கடினம் என்று பேசப்படுகிறது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் தோனியின் ரசிகர்கள் அவர் எப்பொழுது மீண்டும் கிரிக்கெட் விளையாட வருவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு தற்போது வாய்ப்பே இல்லை என்று தெரியவந்துள்ளது. தோனியின் கடைசி வாய்ப்பாக ஐபிஎல் தொடர் கருதப்பட்டது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் உலகக் கோப்பை தொடருக்கான டி20 அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்று ரவிசாஸ்திரி கூறியிருந்தார்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் தோனியின் ரசிகர்கள் தற்போது வருத்தத்தில் உள்ளனர். மேலும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் தோனிக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே தோன்றுகிறது.

Dhoni

ஏற்கனவே இந்திய அணி வீரர்களான கவாஸ்கர், சேவாக், வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ஆகியோர் தோனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் தோனிக்கு சப்போர்ட் செய்து வாசிம் ஜாபர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் என நாசர் உசேன் ஆகியோர் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தோனி குறித்து தனது கருத்தினை கூறியுள்ளார்.

- Advertisement -

அதன்படி அவர் கூறுகையில் : இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை என்றால் தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் கனவு கலைந்து விடும். கடந்த ஒரு ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடாத ஒருவரை எந்த அடிப்படையில் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்வீர்கள். அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்வதே மிகச்சிறந்த முடிவாக இருக்கும்.

Rahul

தோனிக்கு சரியான மாற்று வீரர் கே.எல் ராகுல் தான். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ராகுல் விக்கெட் கீப்பராக பொறுப்பேற்ற பின் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் அவரின் திறனை பார்த்து வருகிறேன். கீப்பிங்கில் தோனி அளவு ராகுல் சிறந்து விளங்கவில்லை. ஆனால் டி-20 கிரிக்கெட்டில் பார்க்கும் போது மூன்றாவது அல்லது நான்காவது இடத்துக்கு ஏற்ப அவரை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தோனிக்கு சரியான மாற்று வீரர் கே.எல் ராகுல் தான். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ராகுல் விக்கெட் கீப்பராக பொறுப்பேற்ற பின் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் அவரின் திறனை பார்த்து வருகிறேன். கீப்பிங்கில் தோனி அளவு ராகுல் சிறந்து விளங்கவில்லை. ஆனால் டி-20 கிரிக்கெட்டில் பார்க்கும் போது மூன்றாவது அல்லது நான்காவது இடத்துக்கு ஏற்ப அவரை பயன்படுத்திக்கொள்ள முடியும். என்று கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement