ப்ளீஸ் தோனி நீங்களே யோசித்து நல்ல முடிவை எடுங்கள் – கம்பீர் ஓபன் டாக்

gambhir
- Advertisement -

உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறி பிறகு தோனியின் ஓய்வு பற்றிய பேச்சு முக்கியமாக இருந்து வருகிறது. அரையிறுதிப் போட்டியில் அவர் ரன் அவுட் ஆனதில் இருந்து அவரது ஓய்வு குறித்த விவகாரம் சூடுபிடிக்க துவங்கியது.

Dhoni

- Advertisement -

உலகக் கோப்பை தொடர் முடிந்து ஓய்வு அறிவிப்பு வெளியிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தோனி இதுவரை தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பினையும் கொடுக்கவில்லை. மேலும் இந்திய அணியில் தோனி தற்போது தேர்வாவது சந்தேகமாக உள்ளது. மேலும் பி.சி.சி.ஐ அவருக்கு ஓய்வு முடிவினை எடுக்க நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தோனி குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : வரும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். எனவே ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர்களில் ஒருவரை இந்திய அணியில் தெரிவு செய்ய வேண்டும்.

Kohli

மேலும் அவர்களுக்கு கீப்பர் வாய்ப்பளித்து ஒன்றரை வருடம் தொடர்ந்து ஆட வைக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் ஆட்டம் குறித்து விரிவாக தெரியும். ஆக அணியின் வருங்காலம் பற்றி யோசிக்க வேண்டியது அவசியம் எனவே தோனி இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் தனது ஒரு ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும். அணியின் நலனுக்காக இதுபோன்ற முடிவுகள் யோசித்து எடுக்க வேண்டியது அவசியம் இந்த விஷயத்தை நாம் உணர்வுபூர்வமாக பார்க்கக்கூடாது என்று கம்பீர் கூறினார்.

Advertisement