ஒருநாள் மற்றும் டி20 அணியில் இவரை தொடர்ந்து புறக்கணிப்பது ரொம்ப தப்பு – கம்பீர் ஓபன்டாக்

Gambhir

இந்திய அணியின் மோஸ் வான்டட் சுழற்பந்து வீரர்களில் ஒருவரான அஸ்வின் டெஸ்ட் அணியில் மட்டுமே சமீபகாலமா ஆடி வருகிறார்.ஒரு நாள் மட்டும் டி 20 போட்டிகளில் வெகு நாளாகவே ஆடவில்லை. 111 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளையும், 46 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளையும் கைப்பற்றி நல்ல ரெகார்டை அஸ்வின் தனது கைவசம் வைத்து உள்ளார். இருப்பினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஷ்வின் இந்தியாவுக்காக விளையாடி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Ashwin

அஸ்வின் டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே பொருத்தமானவர் என்று பிசிசிஐ கருதி அவரை லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் சேர்க்காமல் புறக்கணித்து வருகிறது. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடி வருகிறார். மொத்தம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அஸ்வின் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது சதமும் அடித்துள்ளார்.

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் டி20 அணியில் அவர் பெயர் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முன்பு போல மறுபடியும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அஸ்வினை ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் சேர்க்காதது வருத்தம் அளிக்கிறது என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ashwin

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரில் அஸ்வினை தேர்வு செய்யாமல் ஒதுக்கியது வருத்தத்ததை தந்துள்ளது. டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை எட்டியுள்ள வீரர் ஆதுமட்டுமில்லாமல் 5 டெஸ்ட் சதங்களையும் அடித்துள்ளார். நல்ல ஆட்டத்தை தொடர்ந்து வெளிபடுத்தியும் அவர் ஒருநாள் போட்டி மற்றும் டி20 அணியில் மட்டும் புறக்கணிக்கப்படுவது வேதனைக்குறிய விஷயமாகும்.

- Advertisement -

பந்துவீச்சில் பல்வேறு வேறுபாட்டையும் , வித்தைகளைக் கொண்டு எதிரணிய கலங்க செய்யும் அளவுக்கு திறமையுள்ள ஒரு வீரரரை புறகணிக்க கூடாது. இது தவறான செயலாகும் என்று அஸ்வினுக்கு சாதகமாக கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.