அவங்க 2 பேரையும் பத்தி யோசிக்காதீங்க. மறுபடியும் ஆஸ்திரேலிய தொடரை ஜெயிக்க முடியும் – கம்பீர் நம்பிக்கை

Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அபாரமான வரலாறு படைத்தது.

indvsaus

அதன் பின்னர் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கும் இந்திய அணி இந்த தொடருக்காக மனதளவில் ஆயத்தமாகி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போது அப்போது ஓராண்டு தடை இருந்த ஸ்மித் மற்றும் வார்னர் அணியில் இல்லாததால் இந்திய அணி வெற்றி பெற்றது என்ற ஒரு பேச்சு இருந்தது.

- Advertisement -

ஆனால் இந்திய அணியில் தற்போது இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் பலத்தைக் கொண்டு எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்பதை இந்திய அணி தொடர்ந்து நிரூபித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஸ்மித் மற்றும் வார்னர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அதனால் இம்முறை நடைபெறவுள்ள இந்தத்தொடர் மிகக்கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

IND-bowlers

இந்நிலையில் ஸ்மித் மற்றும் வார்னர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த எந்த அணிக்கு எதிராகவும் எந்த சூழலிலும் சிறப்பாக பந்து வீசிய கூடியவர்கள் மேலும் எந்தவொரு பேட்ஸ்மேன்களுக்கும் சவால் அளிக்கும் விதத்தில் அவர்களால் பந்து வீச முடியும்.

கடந்த முறை வெற்றி பெற்ற அணியோடு ஆஸ்திரேலியா செல்லும் பொழுது போட்டியை நடத்தும் அணிக்கு சமமாக நாம் பலத்துடன் இருப்போம் என்று நம்புகிறேன். மேலும் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோரை கண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை நீங்கள் அவர்களை எளிதில் வீழ்த்த முடியும் என்றும் கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement