இந்திய அணிக்கு சைனி விளையாடக்கூடாது என்று இவர்கள் இருவரும் திட்டம் தீட்டினர் – கம்பீர் நேரடி சாடல்

Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

Saini-1

- Advertisement -

இந்தப் போட்டியில் நவ்தீப் சைனி இந்திய அணிக்காக அறிமுகமானார். அவர் தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அத்துடன் இந்த போட்டியில் 3 விக்கெட் எடுத்து அறிமுக போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்று அசத்தினார். இந்நிலையில் நவ்தீப் கிரிக்கெட் வாழ்க்கையை முடக்க நினைத்த முன்னாள் இந்திய வீரர்கள் குறித்து கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.

இதுகுறித்து ட்வீட்டில் அவர் குறிப்பிட்டதாவது : சைனி இந்தியாவுக்காக விளையாடியதற்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் போட்டியில் பந்து வீசுவதற்கு முன்பே 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளீர்கள் அதாவது பிஷன் சிங் பேடி மற்றும் சேத்தன் சவுகான் ஆகியோரை வீழ்த்தி உள்ளீர்கள் உங்களை தடுக்க நினைத்தவர்களின் மிடில் ஸ்டம்ப் சாய்ந்து கிடைக்கிறது என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு காரணம் யாதெனில் 2013 ஆம் ஆண்டு டெல்லி அணியில் நவ்தீப் சைனி சேர்ப்பதற்காக கம்பீர் இவர்கள் இருவருடன் தீவிர வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பிறகு போராட்டத்திற்கு பிறகு அவரை டெல்லி அணியில் சேர்த்து விளையாட வைத்தார். மேலும் எனது கிரிக்கெட் ஆரம்பிக்க கம்பீர் தான் காரணம் என்று ஏற்கனவே சைனி பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement