ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க இதனை செய்தே ஆகவேண்டும் – கம்பீர் கணிப்பு

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் துவக்க வீரர் ஆன ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நிரந்தர இடம் பிடித்து விளையாடி வருகிறார். இருப்பினும் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

Rohith

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ரோகித் சர்மா இரண்டாவது போட்டியிலும் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு வருடங்களுக்கு பிறகு சதம் விளாசிய ரஹானே தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.

மேலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆல்ரவுண்டர் விஹாரியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கு இரண்டாவது டெஸ்டில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் ஆகி உள்ளது. சொல்லப்போனால் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா இடம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

Rohith-1

இந்நிலையில் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது : என்னைப் பொறுத்தவரை ரோகித் சர்மா தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். ஏனெனில் தற்போது விஹாரி மற்றும் ரஹானே ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். எனவே ரோகித் டெஸ்ட் போட்டிகளில் சாதிப்பதற்கு தன்னுடைய நேரம் வரும் வரை காத்திருந்தே ஆக வேண்டும். அதை தவிர அவர் டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க வேறு வழியே கிடையாது. வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் அவர் டெஸ்ட் போட்டியில் சாதிப்பார் என்று கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement