ரோஹித் நீங்க பர்ஸ்ட் இத பண்ணுங்க. அப்பதான் உங்களால டெஸ்ட் கிரிக்கெட் ஆடமுடியும் – கம்பீர் அறிவுரை

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் ரோகித் சர்மா குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் கம்பீர் ரோகித் குறித்து கூறியதாவது : ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார்.

Rohith

- Advertisement -

அதிலும் குறிப்பாக உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா 5 சதங்கள் அடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். அதேபோல் டி20 போட்டியில் ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க முடியவில்லை.

27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 1585 ரன்களை மட்டுமே டெஸ்ட் போட்டியில் அடித்துள்ளார். அதிலும் 3 சதங்களை மட்டுமே அடித்துள்ளார் அவரால் டெஸ்ட் போட்டிகளில் தனது முழுமையான திறமையை வெளிக்கொணர முடியவில்லை.ஆனால் ரோகித் சர்மாவை சிறப்பான டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக மாற முடியும்.

Rohith

அப்படி மாற வேண்டுமென்றால் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் சிறிது நேரம் அவர் ஒத்துழைத்தால் அவர்களுடன் நேரத்தை செலவிட்டால் அவரால் ஒரு முழுமையான டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக மாற முடியும். மேலும் சச்சின் அல்லது டிராவிட் இருவரில் ஒருவர் அவருக்கு சில மாதங்கள் டெஸ்ட் போட்டி குறித்து பயிற்சி அளித்தால் ரோஹித் கண்டிப்பாக முழுமையான டெஸ்ட் பேட்ஸ்மேனாக மாறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கம்பீர் கூறினார்.

Advertisement