கங்குலி சொன்னது கரெக்ட். அவருக்கு டெஸ்ட் போட்டியில் சேன்ஸ் கொடுங்க தெறிக்கவிடுவாரு – கம்பீர் பேட்டி

Gambhir

இந்திய அணி சமீபத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய போதும் அந்த டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக ராகுல் சாதிக்க தவறினார். மேலும் அவர் சென்ற ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார். அதன்பிறகு தற்போது 12 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

Rahul

மேலும் அவரது ஆட்டம் டெஸ்ட் போட்டிகளில் தற்போது நிலையாக இல்லை மேலும் அவருக்கு பதிலாக துவக்க வீரராக வேறு யாரையாவது களம் இருக்கலாம் என்று முன்னணி வீரர்கள் கங்குலி மற்றும் லட்சுமணன் ஆகியோர் கூறி இருந்த நிலையில் முதன்முறையாக ராகுலின் இடம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவை அந்த இடத்தில் களம் இருக்கலாம் என்பது எனது கருத்து. மேலும் அவருக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு நேரடியாக வெளிநாட்டு தொடர்களில் இருக்க கூடாது.

Rohith-1

இந்தியாவில் நடக்கும் தொடரில் முதலில் களம் இறக்கி விட்டு பிறகு வெளிநாட்டு தொடர்களில் இறக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவில் விளையாடி அவர் சற்று நம்பிக்கை பெற்றால் தான் அவர் வெளிநாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். கங்குலி இதைத்தான் கூறியிருந்தார் அவரின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். இதற்கு முன்னர் இந்திய அணிக்கு சேவாக் தீப் தாஸ் குப்தா போன்ற அதிரடி வீரர்கள் துவக்க வீரராக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி உள்ளனர்.

rohith

எனவே ரோஹித்துக்கு அதுபோன்று வாய்ப்பு கொடுத்தால் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ரோஹித்துக்கு தொடர்ந்து நீங்கள் வாய்ப்பு கொடுக்காமல் மறுத்து வந்தால் இன்னும் 2 ஆண்டுகளில் அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்று கம்பீர் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.